unique visitors counter
Published On: Tue, Aug 16th, 2016

சுவையான மீன் சூப் செய்வது எப்படி

0

எளிய முறையில் மீன் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

 04 துண்டுகள் (கடல் மீன்)
பெரிய வெங்காயம் – 2
மிளகுத்தூள் – 3/4 டீஸ்பூன்
மிளகாய்தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கு
இஞ்சி – சிறிது துண்டு
எண்ணெய் – 1 ஸ்பூன்
கொத்தமல்லி தழை – சிறிதளவு
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்

செய்முறை:

* பெரிய வெங்காயம், கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* இஞ்சியை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.

* மீனை நன்றாக கழுவி பொடியாக நறுக்கிகொள்ளவும்.

* மீன் துண்டுகள், பெரிய வெங்காயம், மிளகுத்தூள், துருவிய இஞ்சி, மிளகாய்தூள், உப்பு, எண்ணெய், 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி மைக்ரோவேவ் ஓவனில் ஹை பவரில் 8 – 10 நிமிடங்கள் வைக்கவும்.

* இரண்டு நிமிடம் ஸ்டாண்டிங் டைம் விட்டு இறக்கவும்.

* இதில் எலுமிச்சை சாறு, கொத்தமல்லி தழை சேர்த்து சூடாக பரிமாறவும்.

About the Author

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>