unique visitors counter
Published On: Fri, Dec 30th, 2016

காகித உறைகள் தயாரிக்கும் தொழிலாளிக்கு ஷிப்லி பாறூக் அவர்களினால் உபகரணம் வழங்கி வைப்பு

-எம்.ரீ.ஹைதர் அலி

காகித உறைகள் தயாரிக்கும் தொழிலாளியான புதிய காத்தான்குடி, கப்பல் ஆலிம் வீதியைச் சேர்ந்த செய்யது அகமதுவின் கைத்தொழிலினை மேம்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து காகிதம் வெட்டும் உபகரணமொன்று நேற்று (29.12.2016) வியாழக்கிழமை வழங்கிவைக்கப்பட்டது.

குறித்த தொழிலாளி 1985ஆம் ஆண்டுமுதல் இக்கைத்தொழிலினை மேற்கொண்டு வருகின்ற போதிலும் இதுவரை காலமும் கத்தரிகோலினை பயன்படுத்தியே தன்னுடைய காகிதங்கள் வெட்டும் வேலைகளை முன்னெடுத்து வந்தார். இதன் மூலம் அவரும் அவரது மனைவியும் இணைந்து நாளொன்றுக்கு 500 தொடக்கம் 600 வரையான காகித உரைகளை மாத்திரமே தயாரிக்க முடிந்ததோடு காகித உறை ஒன்றிற்கு நாளாந்த ஊதியமாக 40 சதம் என்ற மிகக் குறைந்த வருமானத்தினையே இவர்களால் ஈட்ட முடிந்தது.

இவ்வாறு கைகளினால் ஒவ்வொரு காகிதங்களாக கத்தரிப்பதிலுள்ள சிரமங்களை தவிர்த்து காகிதம் வெட்டும் உபகரணம் ஒன்றின் மூலம் தனது தொழிலினை மேம்படுத்த எண்ணிய போதிலும் தன்னுடைய மிகக் குறைந்த வருமானத்தில் இவ்வுபகரனத்தினை கொள்வனவு செய்ய முடியாமல்போனது.

இருந்தபோதும் கிழக்கு மாகாணச பை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கிடம் விடுத்த வேண்டுகோளிற்கமைவாக குறித்த தொழிலாளியின் கைத்தொழிலினை மேம்படுத்துவதற்காகவும், அவரது உழைப்பை கௌரவப்படுத்தும் விதத்திலும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் நேற்று வியாழக்கிழமை குறித்த தொழிலாளியின் வீட்டிற்குச் சென்று காகிதம் வெட்டும் உபகரணத்தினை கையளித்தார்.

இதன் மூலம் அவரது வருமானத்தினை நாளொன்றிற்கு 1000 ரூபா வரை உயர்வடையச் செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

About the Author

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>