unique visitors counter
Published On: Mon, Jan 2nd, 2017

“சமூகத்தின் ஒற்றுமைக்காக விட்டுக்கொடுப்போடு செயற்படும் மனப்பக்குவம் எமக்கு வரவேண்டும்”

-எம்.ரீ. ஹைதர் அலி

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து காத்தான்குடி மீரா பெரிய ஜும்மா பள்ளிவாயல் ஜமாஅத்தார் அமைப்புக்கு தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு 31.12.2016 சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் ஷிப்லி பாறுக் கலந்துகொண்டு தளபாடங்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பொறியியலாளர் ஷிப்லி பாறூக்,

யார் எந்த கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும் மார்க்க ரீதியான விடயங்களை முன்னெடுக்கின்ற போது அதற்கு அரசியல் காரணங்கள் ஒருபோதும் தடையாக இருக்கக் கூடாது

எமது ஊரிலுள்ள அமைப்புகள் சுயாதினமாகவும் அவர்களது கருத்துக்களை சுதந்திரமான விதத்திலும் வெளிக்கொண்டுவரக்கூடிய ஒரு நிலைமை உருவாக வேண்டும். அதற்கு அரசியல் ரீதியான காரணங்கள் ஒரு போதும் தடையாக அமையக்கூடாது என தெரிவித்தார்.

மேலும், விட்டுகொடுப்புகளை செய்ய முடியாத ஒரே விடயம் மார்க்க விடயமாகும். எனவே மார்க்க விடயங்களை தவிர்ந்த ஏனைய எந்த விடயங்களாக இருந்தாலும் சமூகத்தின் ஒற்றுமைக்காக முடியுமானவரை விட்டுக்கொடுப்போடும் அர்ப்பணிப்போடும் செயற்படும் மனப்பக்குவம் எம் அனைவரிடத்திலும் இருக்கவேண்டும்.

இவ்ஜமாஅத்தார் அமைப்பினால் என்னிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டபோது இவ்வாண்டிற்கான எமது நிதி ஒதுக்கீடுகள் அனைத்தும் பூரனப்படுத்தப்பட்டிருந்த போதிலும் இந்த ஜமாஅத்தார் அமைப்புக்கு என்னுடைய ஏதாவது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தற்போது இப்பொருட்களினை பெற்றுக்கொடுத்திருக்கின்றேன்.

இத்தகைய சமூக நோக்கமுடைய அமைப்புகளுக்கு இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் காலங்களிலும் எம்மால் முடியுமான பல்வேறு உதவித்திட்டங்களை மாகாண சபை மூலமாகவும் எங்களது தனிப்பட்ட நிதிகலூடாகவும் பெற்றுக்கொடுப்போம் எனவும் தெரிவித்தார்.

About the Author

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>