unique visitors counter
Published On: Sat, Jan 7th, 2017

மட்டு. மாவட்டத்தில் காத்தான்குடி மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை

-எமது விசேட செய்தியாளர்

இன்று சனிக்கிழமை வெளியான 2016 கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின்படி உயிரியல் விஞ்ஞானம், வர்த்தகம் மற்றும் பொறியியல் தொழில்நுட்பம் போன்ற பிரிவுகளில் காத்தான்குடி மாணவர்கள் மூவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மாவட்டத்தில் முதலாமிடம்

உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை மாணவியான முஹம்மத் ஜிப்ரி பாத்திமா றிஸ்மா A சித்திகளை பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

இவர் காத்தான்குடி-03, ஷெய்குல் பலாஹ் வீதியைச் சேர்ந்த முஹம்மது ஜிப்ரி, பாயிஸா தம்பதியினரின் புதல்வியாவார்.

வர்த்தகப் பிரிவில் மாவட்டத்தில் முதலாமிடம்

வர்த்தகப் பிரிவில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மாணவனான சரிபுதீன் அப்துர் ரஹ்மான் 3A சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

இவர் காத்தான்குடி-02, மெத்தைப் பள்ளி வீதியைச் சேர்ந்தவரும் காத்தான்குடி ஆசிரியர் நிலைய முகாமையாளருமான சரிபுதீன் ஆசிரியர், சரீனா தம்பதியினரின் புதல்வராவார்.

பொறியியல் தொழில்நுட்பப் பிரிவில் மாவட்டத்தில் முதலாமிடம் (தேசிய ரீதியில் 5ஆம் இடம்)

பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மாணவனான அன்ஸார் முஹம்மத் அம்ரீத் A, 2B சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் முதலாமிடமும் தேசிய ரீதியில் 5ஆம் இடத்தையும் பெற்றுள்ளார்.

இவர் புதிய காத்தான்குடி-06, டீன் வீதி, கபூர் ஒழுங்கையைச் சேர்ந்த அன்ஸார் (வியாபாரி), மசூதா தம்பதியினரின் புதல்வராவார்.

About the Author

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>