unique visitors counter
Published On: Mon, Jan 9th, 2017

காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலைக்கு முச்சக்கரவண்டியை அன்பளிப்பு செய்த தனவந்தர்

-எம்.எஸ்.எம்.நஸார் (ஆசிரியர்)

சவூதி அரேபியாவில் தொழில் புரியும் காத்தான்குடியைச் சேர்ந்த தனவந்தர் எம்.சீ.எம்.சாஜித் அவர்களிடம் மட்/மம/மீரா பாலிகா தேசிய பாடசாலை நிர்வாகம் விடுத்த கோரிக்கையை ஏற்று ரூபாய் 651,000.00 பெறுமதிக்கு முச்சக்கரவண்டி ஒன்றை கொள்வனவு செய்து பாடசாலைக்கு இன்று (09.01.2017) திங்கட்கிழமை அன்பளிப்புச் செய்தார்.

முச்சக்கர வண்டியை கையளிக்கும் நிகழ்வு இன்று காலை பாடசாலை ஆராதனை நிகழ்வின் போது இடம்பெற்றது. இந்நிகழ்வில் தனவந்தர் எம்.சீ.எம். சாஜித் அவர்களின் பாரியார் பாடசாலை அதிபர் அல்ஹாஜ் எம்.சீ.எம்.ஏ.சத்தார் அவர்களிடம் முச்சக்கர வண்டியின் ஆவணங்களையும் திறப்பையும் கையளித்தார்.

நீண்ட காலமாக பாடசாலையின்  முக்கிய குறைபாடாக  உணரப்பட்ட போக்குவரத்து வாகன தேவை இன்று தீர்க்கப்பட்டதையிட்டு பாடசாலை நிர்வாகம் அவருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

About the Author

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>