unique visitors counter
Published On: Wed, Jan 11th, 2017

காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு (Photos)

-எம்.எஸ்.எம்.நஸார் (ஆசிரியர்)

2017ஆம் கல்வி ஆண்டிற்கு தரம் ஒன்றிற்கான புதிய மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வுகள் இன்று புதன்கிழமை நாடளாவிய ரீதியில் நடைபெறுகின்றது.

இதற்கமைவாக புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு காத்தான்குடி மட்/ மம/மீரா பாலிகா தேசிய பாடசாலையில் இன்று காலை அதிபர் எம்.சீ.எம்.ஏ.சத்தார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் இஸ்ஸதீன், விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி வலய ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் இப்றாஹீம், காத்தான்குடி பிரதேசக் கல்விப் பணிப்பாளர் பதூர்தீன் ஆகியோரும் பாடசாலை அபிவிருத்திக் குழு செயலாளர், உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதேவேளை இரண்டாம் தர மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதுடன் 2016அம் ஆண்டு க.பொ.த உயர் தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்று மருத்துவத் துறைக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவி மெளலவியா எம்.ஜே.எப்.றிஸ்மா (ஸித்திக்கியா), பிரதம அதிதியினால் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>