unique visitors counter
Published On: Thu, Nov 10th, 2016

முஸ்லிம் பிரதேசத்தின் காணிகளை பிள்ளையான் கட்சிக்காரர்களுக்கு பகிர்ந்தளிப்பு – எம்.எஸ்.சுபைர் குற்றச்சாட்டு

pilayan-and-subair-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சிக்காரர்களுக்கு முஸ்லிம் பிரதேசத்திலுள்ள சுமார் 400-500 ஏக்கர் காணிகள் நீண்ட காலக் குத்தகை என்ற போர்வையில் பகிர்ந்தளிக்கப்பட்டிருப்பதாக மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபைர் குற்றச்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் கூட்டத்தின் கவனத்திற்கு அவர் இந்த விடயத்தை முன்வைத்தார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்;

ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச செயலகத்தினால் காணி நிருவாகம் மேற்கொள்ளப்படும் மீராகேணி, மிச் நகர், ஐயங்கேணி போன்ற கிராமங்களில் உள்ள சுமார் 400 தொடக்கம் 500 ஏக்கர் காணிகள் கிழக்கின் முன்னாள் முதலமைச்சரான பிள்ளையானின் தலைமையில் இயங்கும் ரீ.எம்.வி.பி. எனும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்களுக்கு நீண்ட காலக் குத்தகை என்ற பெயரில் தலா 10 ஏக்கர் காணிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தக் கிராமங்களில் சுமார் 4000 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் பேர் வசிக்கின்றார்கள். அங்கு இட நெருக்கடி, நிலமற்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. விஷேடமாக அங்கு வாழும் மக்களுக்கான கல்வி, சுகாதாரம், பொழுது போக்கு, விளையாட்டு, வாழ்வாதாரம் என்பனவும் நிலமின்மையால் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

கல்வி, மற்றும் சுகாதார, வாழ்வாதாரம் மற்றும் பொதுத் தேவைகளுக்கு காணி இல்லாதிருப்பது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள போதிலும், அங்குள்ள காணிகளை பிள்ளையானின் கட்சிக்காரர்களுக்குப் பகிர்ந்தளித்திருப்பதானது அதிக சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது. மக்கள் நிலமற்ற நிலையில் சன அடர்தியோடு வாழ்ந்து கொண்டிருக்கும்போது ஒருவருக்கு 10 ஏக்கர் என்ற அடிப்படையில் ரீஎம்விபி கட்சிக்காரர்களுக்கு வழங்கியிருப்பதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவே, இந்த விடயம் குறித்து அதிக அக்கறை எடுத்து காணிகளை மீட்டு பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலன்களுக்காக பயன்படுத்த ஆவன செய்ய வேண்டும்” என்றார்.

இந்த பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீரலி உட்பட மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பிர்கள், அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.

About the Author

Displaying 1 Comments
Have Your Say
  1. Topaz says:

    நீங்கள் எல்லோரும் ஒன்றாகத்தானே கும்மி அடிச்சீங்க

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>