unique visitors counter
Published On: Mon, Nov 21st, 2016

மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதிக்கு எதிராக நடவடிக்கை

srinesan-mp-1-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மங்களராம விஹாராதிபதி அட்டம்பிட்டிய சுமணரத்ன தேரரின் அடாவடித் தனங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் பௌத்த சாசன அமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஸவிடம் முறையீடு செய்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாகத் தான் சுமணரத்ன தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து, அவரின் அடாவடித்தன செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதாகவும் அமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஸ உத்தரவாதம் அளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழைமை பாராளுமன்ற கட்டித்தில் விஜயதாஷ ராஜபக்ஸவை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் சந்தித்தபோதே விஹாராதிபதியின் நடவடிக்கைகள் குறித்து முறையிட்டார்.

அமைச்சரிடம் ஸ்ரீநேசன் எம்பி மேலும் தெரிவித்ததாவது;

மங்களராய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர், மட்டக்களப்பில் விபரீதமான நிலையினை உருவாக்கக் கூடிய விதத்தில் அடாவடித்தனமாகச் செயற்பட்டு வருவதை உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது.  இவை தொடர்பான காணொளிக் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சட்டவாட்சிக்கும், இயல்பு நிலைக்கும் எதிராகச் செயற்படும் சுமணரத்ன தேரருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்காது விட்டால், நல்லாட்சி மீது மக்கள் நம்பிக்கை இழக்க வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.  அமைதியான சூழலைக் குழப்பி மீண்டும் இனவாதச் சூழலை உருவாக்கிக் காட்டாட்சி ஒன்றினை உருவாக்குவதற்கு ஏற்ற விதத்தில் குறித்த விகாராதிபதி செயற்பட்டு வருகின்றார். பௌத்த மதத்திற்கு அரசியல் யாப்பில் வழங்கப்பட்டுள்ள முதன்மை ஸ்தானத்தை தேரர் துஷ்பிரயோகம் செய்து வருவதைக் காணமுடிகின்றது.

மட்டக்களப்பில் பௌத்த மதத்தின் தர்மத்தினை சொல்லாலும், செயலாலும் விளக்க வேண்டிய தேரர் அதனை விடுத்து பௌத்தத்தின் மகத்துவத்தினையும், புனிதத்துவத்தினையும் குறைக்கக் கூடிய விதத்தில் செயற்படுவதுடன் சிறுபான்மை இனத்தையும் மக்களையும் மிகவும் இழிவாகப் பேசிவருகின்றார். இவருக்குப் பின்னால் சில அரசியல்வாதிகள் தமது நிகழ்ச்சி நிரலுடன் இருக்கின்றார்கள் என்பதை அறிய முடிகின்றது.

சுமணரத்ன தேரரின் இந்த காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகள் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்காவிடின் எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமல்லாமல் ஏனைய மாவட்டங்களிலும் பெரும் விபரீதங்கள் ஏற்படும்.

இவ்விடயம் தொடர்பாகத் தான் சுமணரத்ன தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து, அவரின் அடாவடித்தன செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதாகவும் அமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஸ உத்தரவாதம் அளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

About the Author

Displaying 1 Comments
Have Your Say
  1. Topaz says:

    உடனடியாக இவரை வேறு பிரதேசம் ஒன்றிற்கு இடமாற்றுவதே மிகப்பொருத்தமானது.

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>