unique visitors counter
Published On: Wed, Jan 11th, 2017

106 வருடகால வரலாற்றில் கல்லடி விவேகானந்தா பாடசாலையில் சாதனை படைத்த மாணவிகள்

-க.விஜயரெத்தினம்

மட்டக்களப்பு மாவட்டம், மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட  கல்லடி விவேகானந்தா மகளிர் மகாவித்தியாலயத்தில் அண்மையில் வெளியான 2016 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் மூலம்  31 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளதாக அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2016 உயர்தரப் பரீட்சைக்கு உயிரியல் விஞ்ஞான பிரிவில் தோற்றிய மாணவிகளில் 3 பேர் மருத்துவத்துறைக்கு தெரிவுசெய்யப்பட்டு பாடசாலைக்கு வரலாற்று சாதனையை ஈட்டித்தந்துள்ளார்கள். இது மெச்சத் தக்கவிடயமாகும். இக் கல்லூரியின் 106 வருடவரலாற்றில் இவ்வருடமே 03 மாணவிகள் மருத்துவத்துறைக்கு தெரிவாகியுள்ளது இதுவே முதல் ச ந்தர்ப்பமாகும். அதன் பிரகாரம் செல்வி.சிவரஞ்சன் சிவாஞ்சலி (மாவட்ட நிலை 03), செல்வி.மயில்வாகனம் பிரியங்கரி (மாவட்ட நிலை 09), இராஜபாரதிசஞ்சிதா (மாவட்ட நிலை 28) இதில் சிவாஞ்சலி மாவட்டத்தில் அதிவிசேடசிறப்பாகத் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கவிடயமாகும்.-என்றார்.

மேலும் இப் பாடசாலையில் பௌதீகஉயிரியல் விஞ்ஞானப் பிரிவில் 09 மாணவிகளும் , வர்த்தகப்பிரிவில் 06 மாணவிகளும் கலைப்பிரிவில் 13 மாணவிகளும் பல்கலைக்கழகம் செல்லவுள்ளார்கள். இம் மாணவிகளையும், கற்பித்த ஆசிரியர்களையும், அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் அவர்களும், பிரதி அதிபர், ஆசிரியர்களும், பாடசாலை அபிவிருத்திக் சங்கம், ஆகியோர்கள் கடந்த திங்கட்கிழமை  பாராட்டி கௌரவித்தார்கள்.

 

About the Author

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>