unique visitors counter
Published On: Wed, Jan 11th, 2017

சூழலை பாதுகாக்க பாடசாலை மாணவர்கள் எடுத்த நடவடிக்கை (Photos)

(க.கிஷாந்தன்)

ஹட்டன் கல்வி வலயததிற்குட்பட்ட டிக்கோயா நுண்கலை கல்லூரி மாணவர்கள் சூழலினை பாதுகாத்து நலம் பெறுவோம் எனும் தொனிப்பொருளில் சூழக்கு தீங்கு ஏற்படுத்தும் கழிவு பொருட்களை சேகரித்து அதனை அழிக்க இன்று (11.01.2017) புதன்கிழமை நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இதற்கமைய டிக்கோயா நகரிலிருந்து பாடசாலைக்கு வரும் வீதியில் பொது மக்களால் வீதியின் இருமறுங்கிலும் வீசி எறியப்பட்ட சூழக்கு தீங்கு ஏற்படுத்தும் உக்காத பொருட்களான பொலித்தீன், பிளாஸ்டிக், போன்ற பொருட்களை சேகரித்து அதனை அழிக்கும் நடவடிக்கையில் இன்று காலை ஈடுபட்டனர்.

பாடசாலையில் தரம் 9சி வகுப்பில் கல்வி பயிலும் மாணவர்கள் இந்நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

உடற்பயிற்சி ஆசிரியர் ஆனந்தகுமரன் அவரகளின் வழிகாட்டலிலேயே அம்மாணவர்கள் இந்நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்,

இன்று எமது மக்கள் மத்தியில் சூழல் தொடர்பான விழிப்புனர்வு முன்னெடுக்க வேண்டியுள்ளது. காரணம் பெரும்பாலானவர்கள் சூழல் தொடர்பாக அக்கறை காட்டுவதில்லை அதனை ஒரு பொருட்டாக கூட மதிக்காது அழித்து வருகினறனர்.

இதனால் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் அண்மைக்காலமாக மக்கள் காடுகளுக்கு தீ வைப்பதும் சூழக்கு தீங்கேற்படுத்தும் பொருட்களை வீசி எறிவதும் ஒரு செயலாக கொண்டுள்ளனர்.

எனவே சூழலை பாதுகாக்க வேண்டும். அப்போது தான் நாம் ஆரோக்கியமாக வாழலாம் என்ற எண்ணம் பாடசாலைகளிலிருந்து உருவாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தினால் இதற்கு உகந்த பருவம் தரம் ஒன்பது என்பதனை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தினை முன்னெடுத்தேன்.

இதனை செய்வதன் மூலம் சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் மாணவர்களின் மனதில் தோன்றுவதுடன் கழிவு பொருட்களை கண்ட இடங்களில் வீசக்கூடாது என்ற சிந்தனையும் உருவாகுவதோடு இது பெற்றோர்களையும் சென்றடையும் என தெரிவித்தார்.

எனவே ஒவ்வொருவரும் நாம் வாழும் சூழல் தொடர்பாக இவ்வாறு அவதானம் செலுத்தினால் எமது சூழல் விருப்பான ஆரோக்கியமான சூழலாக மாறுவதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

About the Author

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>