unique visitors counter
Published On: Tue, Nov 8th, 2016

70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் சூப்பர் மூனை எதிவரும் 14ம் திகதி காணலாம்

moon

பெளர்ணமி நிலவை விட 30 மடங்கு அதிக வெளிச்சத்தில் தோன்றும் நிலவை எதிர்வரும் 14ம் திகதி அனைவரும் காணலாம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த அரிய காட்சி இடம்பெறும்.

இது குறித்து சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

‘சூப்பர் மூன்’ எனப்படுவது பூமிக்கு மிக அருகில் நிலவானது காட்சியளிப்பதாகும். அந்த நேரத்தில் நிலவானது மிகவும் பிரகாசமாகவும், மிகப்பெரியதாகவும் தோற்றமளிக்கும். இந்த நிகழ்வானது 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பதாகும். இந்த ‘சூப்பர் மூன்’ கடந்த 1948ம் ஆண்டு தோன்றியது. அதனைத்தொடர்ந்து தற்போது அனைவருக்கும் காட்சியளிக்க உள்ளது.

நிலவானது பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரத்து 400 கிலோமீட்டர் தொலைவில் சுற்றி வருகிறது. இந்த பூமியை சுற்றிவரும் நிலவானது குறிப்பிட்ட நீள்வட்டப்பாதையில் செல்லாமல் அதில் இருந்து விலகி சில நேரங்களில் பூமிக்கு அதன் தொலைவில் இருந்து 48 ஆயிரம் கிலோமீட்டர் அருகில் வந்து செல்லும்.

தற்போது இதே போல் பூமிக்கு மிக அருகாமையில் எதிர்வருகிற 14ம் திகதி வந்து கடந்து செல்லும். இந்த ‘சூப்பர் மூன்’ வானத்தில் சாதாரணமாக பெளர்ணமி அன்று நிலவை காண்பதை விட பல மடங்கு மிகப்பெரியதாக காட்சியளிக்கும் அந்த நேரத்தில் அதன் வெளிச்சம் 30 மடங்கு அதிகமானதாக இருக்கும்.

 

About the Author

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>