unique visitors counter
Published On: Fri, Jan 6th, 2017

இன்று முதல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு தற்காலிக பூட்டு..!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விமான ஓடுபாதை புனரமைப்புப் பணிகள் காரணமாக இன்று (06.01.2017) வெள்ளிக்கிழமை முதல் கட்டுநாயக்க விமான நிலையம் தினமும் 8 மணித்தியாலங்கள் மூடப்படுகிறது.

காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரையான 8 மணித்தியாலங்கள் மூடப்பட்டிருக்கும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்தார்.

இதன் காரணமாக வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் 5 மணித்தியாலங்களுக்கு முன்னர் விமான நிலையத்திற்கு வருகை தருமாறு அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

விமான ஓடுபாதை புனரமைப்பு பணிகளுக்கு 5 மில்லியன் டொலர் செலவாகுவதாக அசோக் அபேசிங்க தெரிவித்தார்.

அத்தோடு நெதர்லாந்து அரசின் கண்காணிப்பின் கீழ் சீன நிறுவனம் ஒன்று இதன் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க கூறியுள்ளார்.

இன்று தொடக்கம் 4 மாதங்களுக்கு இவ்வாறு விமான நிலையம் 8 மணித்தியாலங்கள் மூடப்பட்டிருக்கும் என என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

About the Author

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>